சூப்பர்ஹிட் கிளாசிக் படத்தில் நடிக்க மறுத்த விஜய்.!!

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் திரைக்கு வர காத்திருக்கின்றது.

இந்த கொரொனா மட்டும் வராமல் இருந்திருந்தால் மாஸ்டர் உலகம் முழுதும் நேற்று வெளிவந்து திருவிழா போல் இருந்திருக்கும்.

இந்நிலையில் விஜய் தற்போது தான் மாஸ் படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் காதல் திரைப்படத்தில் தான் நடித்து வந்தார்.

இவருக்கு தான் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படம் வந்ததாம், ஆனால், அப்போது அதில் விஜய் நடிக்க மறுத்துள்ளார். இதை சேரன் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.