கொரோனாவுக்கு பலியான 7ஆவது நபர்..!!

இலங்கையில் கோவிட்-19 வைரஸினால் உயிரிழந்த 7ஆவது நபரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.

அவரின் சடலம் இன்று முற்பகல் 11.30க்கு கொழும்பு கொட்டிகாவத்தையிலுள்ள பொது மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகரான 44 வயதுடை நபர் நேற்று உயிரிழந்திருந்தார்.

இவருடைய மரணத்தை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.