எச்சரிக்கை விடுத்துள்ள கண்டி மருத்துவர்..காரணம் ??

கொரோனா வைரஸ் சரியான முறையில் ஒழிக்க முடியாவிட்டால் கண்டி வைத்தியசாலையின் வாசலில் நூற்றுக்கணக்கான சடலங்களை காண முடியும் என அந்த வைத்தியசாலை மருத்துவர் சிரத்தா ஹேமப்ரிய எச்சரித்துள்ளார்.

இந்த தொற்று 100 பேருக்கு பரவினால் அவர்களிடத்தில் இருந்து 30 பேர் வரை பரவி மூன்று பேர் வரை மரணிக்கும் நிலையே தற்போது உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.