பேஸ்புக் விடுக்கும் வேண்டுகோள்..!!

தற்போது நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் பயனர்களிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.

அதாவது கொரோனா வைரஸ் அறிகுறிகள் தொடர்பிலான தகவல்களை சினேகபூர்வமாக பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுள்ளது.

Carnegie Mellon பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

இவ் ஆய்விற்காகவே குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுள்ளது பேஸ்புக்.

இதற்காக அமெரிக்காவில் உள்ள தனது பயனர்களுக்கு இணைப்பு ஒன்றினை பேஸ்புக்கில் காண்பிக்க ஆரம்பித்துள்ளது.

குறித்த இணைப்பில் கிளிக் செய்து கொரேனா வைரஸ் தொடர்பான கருத்துக்கணிப்பில் பங்குகொள்ள முடியும்.

இதன் மூலம் ஆய்வை தொடர்வதற்கான தகவல்களை பயனர்கள் பகிர்ந்துகொள்ள முடியும்.