கொரோனா வைரஸினை 5G இணைப்பு பரப்புவதாக தவறான தகவல்

கொரோனா வைரஸ் ஆனது மிக வேகமாக ஒருவரிடமிருந்து மற்றையவர்களுக்கு பரவக்கூடியது.

இதற்கு ஒருவருடைய தொடுகை மற்றும் தும்மல் அல்லது இருமல் காரணமாக இருக்கலாம் என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5G தொலைபேசி இணைப்புக்களும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக அமைகின்றது என்ற தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான வீடியோக்களும் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகின்றன.

எனினும் 5G வலையமைப்பிற்கும் கொரோனா வைரஸ் பரவுவதற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இதனால் குறித்த வீடியோக்களை யூடியூப் தளத்திலிருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கி வருகின்றது.