பிரித்தானிய சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

பிரித்தானிய சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தாங்கள் புகையிலைத் தாவரத்தைப் பயன்படுத்தி கொரோனாவுக்கெதிரான தடுப்பூசி ஒன்றைத் தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

British American Tobacco நிறுவனம் என்ற அந்த சிகரெட் தயாரிக்கும் நிறுவனம், தங்கள் தயாரிப்பான தடுப்பூசி ஜூன் மாதம் வாக்கில் தயாராகும் என்று அறிவித்துள்ளது.

அத்துடன் தங்களால் வாரம் ஒன்றிற்கு 3 மில்லியன் பேருக்கு கொடுக்கும் அளவுக்கு தடுப்பு மருந்தை தயாரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மரபியல் மாற்ற புகையிலை தாவரங்களை பயன்படுத்தி கொரோனாவுக்கெதிராக போரிடும் அந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் கெண்டக்கி கிளை நிறுவனம் ஒன்று எபோலாவுக்கான மருந்து ஒன்றை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.