மது குடிப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்குவது இல்லையா?

மது குடிப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்குவது இல்லையா? பதில்: மது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. பாதிப்பு தான் அதிகம். மது குடித்தாலும் கொரோனா வைரஸ் வரவும்.

நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? பதில்: பரவாது. மனிதனிடமிருந்து செல்ல பிராணிக்கு பரவாது, எனினும் ஹாங்காங்கில் நாய்க்கு கொரோனா வைரஸ் பரவியதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்க தாமதம் என்? பதில்: மருந்து உள்ளே சொல்லும் போது மனித செல்களை சேதப்படுத்த கூடாது. அது உள்ளே செல்லும் போது வைரஸ் செல்களை மட்டும் சேதப்படுத்த வேண்டும். ஆகையால் தடுப்பு மருந்து தயாரிக்க தாமதமாகிறது.

கொரோனா வைரஸ் பாதித்த மனிதரை மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குமா? பதில் : தற்போது அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.

நம் செல்போன் மீது வைரஸ் வாழுமா? பதில்: வாழும், முறையாக சுத்தம் செய்வது அவசியம்.

காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? பதில்: பரவும். சளி, எச்சில் சுமார் ஒரு மீட்டர் வரை காற்றில் பறந்து கீழே விழுகிறது. பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து ஒரு மீட்டர் தள்ளி இருப்பது நல்லது.