சீக்கிரமே முகம் வெள்ளையாகணுமா??

இயற்கைக்கு மிஞ்சினது எதுவும் இல்லை. என்ன தான் அழகு நிலையங்களுக்கு போய் பேஷியல் பண்ணாலும் அது கொஞ்சம் காலம் தான் தாக்குப்பிடிக்கும்.

ஆனால் இயற்கையான முறையில் தொடர்ந்து நம்மை பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கலாம்.

அப்படி நமக்கு இளமையையும், அழகையும் கொடுக்கும் தன்மை ஸ்டாபெர்ரியில் உள்ளது. ஸ்டாபெர்ரி பழம் எப்படி சிவப்பு நிறத்தில் உள்ளதோ அதை போல் ஸ்டாபெர்ரியை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் முகம் விரைவில் சிவப்பாக மாறும்.

வேண்டுமென்றால் உடலுக்கு தடவும் க்ரீம்கள் அனைத்தையும் பாருங்கள், அதில் அந்த க்ரீமை செய்யப் பயன்படும் பொருட்களில் ஸ்ட்ராபெர்ரியும் இருக்கும். ஏனெனில் இந்த பழத்தில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

ஆகவே அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்தை பொலிவாக்க, இந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைத்து சருமத்திற்கு ஒருசில ஃபேஸ் மாஸ்க் செய்தால், சருமத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் மற்ற கிருமிகள் நீங்கி, சருமம் பட்டுப் போல் மிளிரும்.

சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்யும் உணவுகளிலும் ஸ்டாபெர்ரியை நிறம் சேர்க்க பயன்படுத்துகிறார்கள்.

ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும் உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கிறது. ஏராளமான நார்ச்சத்துகள் ஸ்டாபெரியில் நிறைந்துள்ளன. புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை ஸ்டாபெர்ரி தடுக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதைகளை சீர் செய்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் சீராக உள்ளது.

5 பழங்களில் 250மிலி அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக்கின்றன.

இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 2, ஆரஞ்சு சுளைகள் 2, பழுத்த, நாட்டு வாழைப்பழம் 1, சீனி அல்லது நாட்டுச்சர்க்கரை 10 கிராம் நன்கு அரைத்துகொள்ளலாம்.

கொஞ்சம் நீர் சேர்த்து இளக்கமாக அரைத்து குடிக்கலாம். இந்த கலவையை முகத்தில் பூசினாலும் பேஷியல் பண்ண மாதிரி முகம் பொலிவு தரும்.

முகத்தை பராமரிக்கும் முறை

  • 2 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், 1 டேபிள் ஸ்பூன் தேனை விட்டு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் சருமம் அழகாக காணப்படும்.
  • ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், கொஞ்சம் எலுமிச்சை சாற்றை பிழிந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். முகம் சுத்தமாக காணப்படும்.
  • ஸ்ட்ராபெர்ரியுடன், கொஞ்சம் தயிர் சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவினால் முகம் மிருதுவாக காணப்படும்.
  • எந்த ஒரு பொருளையும் சேர்க்காமல், வெறும் ஸ்ட்ராபெர்ரியை வைத்துக் கூட சருமத்தை பொலிவாக்கலாம். ஸ்ட்ராபெர்ரியை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவி 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் அழகாக காணப்படும்.