கொரோனா தடுப்பு நிதி திரட்டிய திரௌபதி இயக்குனர்.!!

கொரோனா வைரஸ் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் திரௌபதி. கூட்டு பங்களிப்பு முறையில் தயாரிக்கப்பட்டு, சுமார் 50 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் நல்ல வசூல் குவித்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்க யாராவது முன்வந்தால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக இயக்குனர் மோகன் ஜி டிவீட் செய்துள்ளார்.

இதனை கண்ட ஒருவர், திரௌபதி படம் பத்து கோடி லாபம் வந்ததுன்னு சொன்னாங்க, அதுல ஒரு கோடி செலவு பண்ணா என்னவாம் என்று கமெண்ட் செய்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அந்த பதிவிற்கு பதில் அளித்த மோகன் ஜி, படத்தை நான் புரொடக்ஷன் விலைக்குத்தான் விற்றேன். அதை முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப கொடுத்துவிட்டேன். லாபம் எல்லாம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தான். வேண்டும் என்றால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.”என்று கூறியுள்ளார்.