மாஸ்டர் படத்தின் பாடல்கள் செய்த இமாலய சாதனை..!!

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு, முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே, இப்படம் மிக பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மாஸ்டர் திரைப்படத்தில் பல இளம் நடிகர்களுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பதற்கு வாய்ப்பளித்துள்ளார், நடிகர்கள் சாந்தனு, அர்ஜுன் தாஸ், மகேந்திரன் உள்ளிட்ட இளம் நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகுமேன அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் கரணத்தினால் ஏப்ரல் 13ஆம் தேதி வரை இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, எனவே இப்படம் வெளியாவது கேள்வி குறியே.

மேலும், மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் கடந்த மார்ச்15ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் இமாலய சாதனையை ஒன்றை செய்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் வெளியான அனைத்து தளங்களிலும் 1 கோடிக்கும் மேலானொர் மாஸ்டர் படத்தின் பாடல்களை கேட்டுள்ளனர். தற்போது இதனை விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.