தேர்வை எழுதிவிட்டு குழந்தையை பெற்றெடுத்த 16 வயது சிறுமி.. நாமக்கல்லில் பேரதிர்ச்சி சம்பவம்.!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் சீராப்பள்ளி பகுதியை சார்ந்த 16 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், இவர் தனது தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். சிறுமியின் தாய் கட்டிட பணிகளுக்கு சென்று வந்து சிறுமியை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதியன்று மாணவி அலறியபடி மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து ஆசிரியர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே, பள்ளிக்கு வந்த சிறுமியின் தாய், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு தாய் உள்ளாகியிருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் சிறுமியை அனுமதி செய்துள்ளனர். சிறுமிக்கு அன்று மாலையே பெண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமிக்கு தேவையான சிகிச்சை மருத்துவமனையில் மேற்கொண்டுள்ளனர்.

இதன்பின்னர் சிறுமியிடம் தாயார் மேற்கொண்ட விசாரணையில், அங்குள்ள பள்ளிப்பட்டு ஆதிதிராவிடர் தெரு பகுதியை சார்ந்த காமுக வயோதிகன் வீரமுத்து (வயது 70) என்பவன் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

மேலும், இரண்டு முறை சிறுமியை காமுகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். தனது உடல்நிலை குறித்து சற்றும் அறியாத சிறுமிக்கு இறுதியில் பெண் குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இது குறித்து சிறுமியின் தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வீரமுத்துவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.