இத்தாலி, ஸ்பெயினில் ஒரேநாளில் 700 க்கும் மேற்பட்டோர் பலி!!

உலகம் முழுவதும் சுமார் 199 நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர்.

இதனால் உலக நாடுகள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு தேவையான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், உலகளவில் தற்போது வரை 532,119 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,083 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நோயின் தாக்கத்தில் இருந்து 124,326 பேர் மீண்டுள்ள நிலையில், உலக நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டில் 700 க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் இன்றைய நிலவரப்படி 80,589 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மொத்தமாக 8,215 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரேநாளில் 712 பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 8,215 ஆக அதிகரித்துள்ளது.

இதனைப்போன்று ஸ்பெயின் நாட்டில் இன்றைய நிலவரப்படி 57,786 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,365 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரேநாளில் 718 பேர் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 4,365 ஆக உயர்ந்துள்ளது. சீனாவை விட அதிகளவு பலி எண்ணிக்கையை கொண்ட நாடுகளாக இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளது.