விஜய், அஜித்திற்கு தேவை ரசிகர்களின் வசூல் மட்டும் தானா?

தமிழ் சினிமாவில் தலதளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் அஜித், விஜய். இவர்கள் படங்களுக்கு எப்போதும் பிரமாண்ட ஓப்பனிங் இருக்கும். அதே நேரத்தில் வசூல் மன்னர்கள் என்று அழைப்பார்கள்.

அந்த அளவிற்கு படத்திற்கு படம் தங்கள் வசூலையும், சம்பளத்தையும் உயர்த்தி செல்வார்கள். ஆனால், தற்போது உலகமே கொரோனா வைரஸ் காரணமாக அச்சத்தில் உள்ளது.

அப்படியிருக்க பல முன்னணி நடிகர்கள் முன் வந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய விஜய், அஜித் மௌனமாகவே இருந்து வருகின்றனர்.

இதை பார்த்த பலரும் சமூக வலைத்தளத்தில் இவர்களுக்கு வசூல் தான் முக்கியம் ரசிகர்களோ, மக்களின் தேவையோ முக்கியமில்லை என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.