கொடூர பயங்கரவாத தாக்குதல்… 92 இராணுவ வீரர்கள் பலி!!

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள வடக்கு மத்திய ஆப்பிரிக்க பகுதியில் சாட் குடியரசு நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டினை சுற்றியே லிபாய், சூடான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் அமைந்துள்ளது.

இந்த நாட்டில் போகோஹராம் மற்றும் ஐ.எஸ் போன்ற பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இவர்களின் ஆதிக்கத்தை குறைக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களும், பல உயிரிழப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்குள்ள போமா பகுதியில் இராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சாட் நாட்டில் அமைந்துள்ள லக் மாகாணத்தில் இருக்கும் போமா பகுதியில், 20 க்கும் மேற்பட்ட இராணுவ வாகனத்தில் இராணுவ அதிகாரிகள் சென்று கொண்டு இருந்துள்ளனர். இந்த நேரத்தில், இராணுவ வீரர்களை குறிவைத்து போகோஹராம் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த கொடூர தாக்குதலில் சுமார் 92 பயங்கரவாதிகள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.