இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..

சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 378,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,510 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.

இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் இந்தியாவில் மூவர் பலியாகியுள்ளனர். இதன் மூலமாக பலி எண்ணிக்கையும் 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.