ஜனாதிபதி செயலகத்தின் அவசர அறிவிப்பு!

ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிப்பதற்கான அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது.

1. கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டம், நாளை 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீக்கப்படும்.

2.இந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நாளை (24) நாளை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். அது, 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரையிலும் அமுலில் இருக்கும்.

3. இந்த மாவட்டங்களில் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

4. ஏனைய மாவட்டங்களில் 23ஆம் திகதி பகல் 2 மணிக்கு, ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

5. அந்த ஊரடங்கு சட்டம் 26 ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைதியம் பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

6. நாட்டில் மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்து செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

7. வெளிநாட்டு பயணிகளை ஏற்றி செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

8. அரிசி உள்ளிட்ட அத்தியாவசி பொருட்களையும் மரக்கறிகளையும் ஏற்றி செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.