கொரோனாவால் கடுமையாக்கப்பட்ட விதிகள்!

கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரிக்குள் இயக்கப்பட்டு வரும் உள்ளூர் பேருந்துகளில் ஒரு இருக்கையில் ஒரு பயணி மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் இடவசதிகளுடன் பயணிகள் நெருக்கம் இன்றி பயணிக்கின்றனர்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் கொரோனாவால் இப்படி ஒரு நல்ல மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது பாரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மாநிலத்தில் மாத்திரம் இன்று முதல் 31 ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.