இளநீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..!

ளநீரில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அமில்ம் உள்ளதால், இது மிகவும் சக்தி வாய்ந்த டையூரிக் ஏஜென்ட்டாக செயல்பட்டு, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.

அது மட்டும் இல்லாமல், இளநீரை தினமும் குடித்து வந்தால், அது சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

கர்ப்பிணிகள் இளநீரை தினசரி குடித்து வருவது நல்லது. ஏனெனில் இளநீர் தாகத்தை தணிப்பதோடு, அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது.

சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து, அதனால் கடுமையான வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவற்றை சந்திக்கக்கூம்.
ஆனால் தினமும் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, அதனால் எவ்வித பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம்.

முக்கியமாக தினமும் இளநீர் குடித்து வந்தால், அதிலும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதனால் நோய்களின் தாக்கம் குறையும்.