இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1589 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில், அதை மீறிய 1589 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பை்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 20ம் திகதி மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாட்டின் 8 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு விலக்கப்பட்டது.

இந்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1589 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பாவித்த மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்கள் உட்பட 362 வாகனங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.