திருமணமாகி ஒரு நாளேயான காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து விபரீத முடிவு!

ஆம்பூர் அருகே திருமணமாகி ஒரு நாளேயான காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மேம்பட்டி சாமரிஷிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (29), வாணியம்பாடி புதூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் திருமணமான முதல்நாளே காதல் ஜோடியான இருவரும் ஆம்பூர் அடுத்த வீரவர் கோயில் பகுதியில் சென்னை – பெங்களூர் செல்லும் ரயில்வே மார்க்கத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

சடலத்தை மீட்ட ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்யும் முன்பு இருவரும் தண்டவாளத்தில் படுத்து செல்ஃபி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.