அநுராதபுர சிறைச்சாலை கைதிகளால் உடைப்பு!

அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் முரண்பட்டுக்கொண்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறைச்சாலையில் கொரனா காய்ச்சல் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதிகள் சிறை உடைப்பு முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அநுராதபுர சிறைச்சாலையில், சற்றுப் பதற்றமான நிலை நிலவுவதாகவும். அரசியல் கைதிகளின் சிறையையும் ஆயுள் கைதிகள் உடைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.