பல்வேறு சாதனை படைத்த இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு..!!

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ரஞ்சி வீரர் வாசிம் ஜாபர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் ஜாபர் 34.11 என்ற சராசரியுடன் 1944 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

அவரின் அதிகபட்ச ஓட்டங்கள் 212 என்பதோடு மொத்த ஓட்டங்களில் 5 சதங்களும், 11 அரை சதங்களும் அடக்கம்.

ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக அளவில் ஓட்டங்களை குவித்த வாசிம் ஜாபர் ரஞ்சியில் 12000 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆவார்.

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பா வாசிம் ஜாபர் விடுத்துள்ள அறிக்கையில், நான் விளையாடிய போது எனக்கு தலைவராக இருந்தவர்கள் மற்றும் அனைத்து வீரர்களுக்கும் எனது நன்றி.

எல்லா சூழலிலும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தார் மற்றும் மனைவிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.