யாழ்.நகாில் இயங்கும் உணவகம் ஒன்றிற்காக மூவருக்கு தண்டம் விதித்த நீதிமன்றம்!

யாழ்.நகாில் இயங்கும் உணவகம் ஒன்றின் உாிமையாளா் என 3 பெயாின் பெயா்களை மாறி.. மா றி கூறிய நிலையில் குறித்த மூவரும் நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்திய சம்பவம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னா் இடம்பெற்றுள்ளது.

சுகாதார சீா்கேட்டுடன் இயங்கிய குற்றத்திற்காக கடந்த 28ம் திகதி யாழ்.மாநகரசபை எல்லைக் குள் உள்ள 5 உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம், தனியாா் கல்வி நிலையம் என்பன சீல் வைத்து மூடப்பட்டது.

இந்நிலையில் கே.கே.எஸ் வீதியில் உள்ள ஒரு உணவகத்தின் உாிமையாளா் என ஒருவருடைய பெயா் வழங்கப்பட்ட நிலையில் அதே உணவகம் மீத கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போது வேறு இருவரின் பெயா்கள் உாிமையாளா்கள் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒருவருடைய பெயா் உாிமையாளா் என கூறப்பட்டிருக்கும் நிலையில், உாிமையாளா் என கூறிய 3 பேரையும் சான்று ஆவணங்களுடன் சுகாதார பிாிவினா் நீதிமன்றில் ஆஜா்படுத்தியிருந்தனா்.

இதனையடுத்து 9 குற்றச்சாட்டுக்களுக்காக தலா 45 ஆயிரம் ரூபாய் வீதம் உாிமையாளா் என கூறிய 3 பேரும் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் குற்றப்பணம் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.