திருமணத்தில் மாமியார் மருமகள் காலில் விழுந்த சம்பவம்.!

திருமணம் அன்று நடைபெற்ற பொழுது பதற்றத்தில் மாமியார் மருமகளின் கால்களை தொட்டு ஆசிர்வாதம் வாங்கிய சம்பவமானது வீடியோவாக வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்வை கேரளா மாநிலத்தில் இருக்கும் திருமணம் ஒன்றில் நடைபெற்றிருக்கின்றது. இந்த வீடியோவில் மணமகன் மணமகள் உறவினர்கள் சூழ மணமேடையில் இருக்கின்றனர். அப்பொழுது மணமகள் மாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்குவது வழக்கமான ஒன்றாகும்.

ஆனால் இந்த திருமண நிகழ்வின் பொழுது மருமகளிடம் இருந்து பூ, வாழைப்பழம் ஆகியவற்றை பெற்றுக்கொண்ட மாமியார் திருமண பதற்றம் மற்றும் குழப்பநிலை காரணமாக மருமகளின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் பெற்று இருக்கின்றார்.

இது இருவரையும் சங்கடத்திற்கு ஆளாக்கி இருக்கின்றது. இருப்பினும் இதனை கண்ட குடும்பத்தினர் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். இதுகுறித்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.