சகோதரப் படுகொலையின் மூலமே புலிகள் தனி இயக்கமானார்கள்: எம்.ஏ.சுமந்திரன்!

விடுதலைப் புலிகள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள். ஜனநாயக வழியில் செயற்படும் நாம் அதைப் போல செயற்பட முடியாது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

யாழில் இன்று இடம்பெற்ற, அவரது ஆதரவாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த காலத்தை கடந்து வந்த கட்சி இது. யுத்தகாலத்திற்கு முன்னரும் இருந்தது, யுத்த காலத்திற்கு பின்னரும் இருந்த கட்சி. யுத்தகாலத்தில் அடங்கிப் போயிருந்த கட்சி. செயலிழந்திருந்த கட்சி. திடீரென ஜனநாயகப் பண்புகள் வந்து விடாது.

30 வருடம் வேறுவிதத்தில் பழவி விட்டோம். சொன்னதை செய்தது. யுத்த காலத்தில் கூட பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன. ஒன்று மட்டும் இருக்கவில்லை. அது ஒன்றாக வந்தது எப்படியென்பதும் எல்லோருக்கும் தெரியும். சகோதரப் படுகொலைகளின் மூலமாகத்தான் அது ஒன்றாக வந்தது. அது எல்லோருக்கும் தெரியும் என்றார்.