மார்ச் 11 உறுதி! கமலுடன் இணையும் ரஜினிகாந்த்!

தமிழ் திரைத்துறையின் முண்ணனி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.

இந்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக யாருடன் இணைவார் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. தற்போது அவர், கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது கமல் தயாரிகின்ற படத்தில் ரஜினி நடிப்பதாகவும் அதனை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்தின் பூஜைகள் வரும் மார்ச் 11 முதல் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.