தனது ஹேர் ஸ்டைலை மிகவும் கேவலமாக விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஒவியா!

நடிகை ஒவியா தமிழில் நாளை நமதே என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் நடிகர் விமலுடன் களவாணி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார் ஒவியா.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவியா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அவரின் வெளிபடையாக கருத்துகளை கூறும் தன்மையை ரசித்த ரசிகர்கள் நடிகை ஒவியாவிற்காக சமூக வலைத்தளத்தில் ஆர்மியை துவங்கினர்.

இதன்பின் பிக்பாஸ் விட்டில் இருந்து வெளியே வந்த ஒவியா தனது ஹேர் ஸ்டைலை மாற்றி கொண்டார். மேலும், தனது முடியை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்ய கொடுத்துவிட்டதாகவும் கூறினார்.

தற்போது ஒவியாவின் ஹேர் ஸ்டைலை விமர்சித்து ரசிகர் ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஒவியா “நான் எனது மூளையை வளர்க்க நினைக்கிறேன், முடியை அல்ல” என கூறியுள்ளார். மேலும் “கவலைப்படாதீங்க நான் விக் வெச்சிக்கிறேன்” எனவும் பதிவிட்டுள்ளார்.