அந்த வீடீயோவை காண்பித்து…. பலமுறை பலாத்காரம்…..

கதாநாயகியாக ஆக வேண்டும் என்று ஆசை கொண்ட ஒரு துணை நடிகையை பலாத்காரம் செய்த சம்பவம் ஜோத்பூரில் அரங்கேறியிருக்கிறது.

பல வருடங்களாக பாலிவுட்டில் கதாநாயகி ஆக வேண்டும் என ஜோத்புரை சேர்ந்த ஒரு இளம் பெண் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கோ படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த கவுசிக் என்பவரின் அறிமுகம் அவருக்கு ஏற்பட இந்த பெண்ணை ஹீரோயின் ஆக்குகிறேன் என்று கூறி காதலிக்க துவங்கி இருக்கின்றார். அந்த பெண்ணும் நம்பி அவருடன் தன்னுடைய பொழுதை கழித்துள்ளார். கவுசிக் ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்து இருக்கின்றார்.

பின்னர் அந்த பெண்ணிடம் அந்த வீடியோவை பலமுறை காண்பித்து பலாத்காரம் செய்து இருக்கின்றார். ஆனால், இதுவரை அவரை வைத்து படம் எடுக்கவில்லை. இவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை. ஆனால் அந்த பெண்ணை தன்னுடைய சுகத்துக்காக அவர் பயன்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்.

இதனால் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றார். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.