மரணபோதையில் முகேஷ்., பேண்ட்டுக்குள் புகுந்த பாம்பு.!

உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் ஜான்சி மாவட்டத்தில் முகேஷ் என்பவர் தோட்டம் ஒன்றின் அருகில், நல்ல போதையில் மயங்கி விழுந்து கிடந்து இருக்கின்றார். இந்த நிலையில், அருகில் புதருக்குள் இருந்த பாம்பு ஒன்று அவர் படுத்திருக்கும் இடத்திற்கு அருகே வந்து முகேஷின் பேண்டிற்குள் சென்றிருக்கின்றது.

பேண்டுக்குள்ளே பாம்பு செல்வதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து முகேஷை காப்பாற்றுவதற்காக அந்தப் பாம்பை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரிய பெரிய கம்புகளை கொண்டு முகேஷ் பேண்டிலிருந்து அந்த பாம்பை வெளியேற்ற பாம்பு வருவது போல் வந்துவிட்டு மீண்டும் பேண்டிற்குள் சென்றது.

பின்னர் மிகப்பெரிய போராட்டத்தில் இருந்து வெளியேறிய பாம்பு மீண்டும் அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், உள்ளே பாம்பு போனது கூட தெரியாமல் மட்டையாகி கிடக்கும் நபரை கழுவி ஊற்றி கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.