பிரபல கிரிக்கெட் வீரர் படத்தில், நடிக்கும் முன்னணி நடிகர்.!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆக இருந்த சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக எடுக்கப்படுகின்றது.

இதற்கு முன்பாக பிரபல கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதுபோலவே கபில் தேவின் வாழ்க்கை வரலாறான 83 தற்போது உருவாகி வருகின்றது.

மேலும், கிரிக்கெட் வீரர்களான மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோரின் படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் தற்போது பிரபல வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஆன பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப் பட இருக்கின்றது.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் இயக்க இருக்கிறார். கங்குலியாக இந்த படத்தில் நடிகர் ரித்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.