“நான் மூளையை வளர்க்க நினைக்கிறேன், முடியை அல்ல” – ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வெளிப்படையான கருத்துக்களால் மக்கள் மத்தியில் இடம்பிடித்தவர் ஓவியா. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த கையோடு தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றினார்.

தன்னுடைய தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்ய கொடுத்துவிட்டதாக கூறினார். அதிலிருந்து அவர் தன்னுடைய தலைமுடியை நீளமாக வளர்க்காமல் ஒரே விதமான சிகை அலங்காரத்திலேயே இருக்கிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓவியா, “நான் மூளையை வளர்க்க நினைக்கிறேன், முடியை அல்ல” என கூறியுள்ளார். மேலும் “வருத்தப்படாதீங்க.. நான் விக் வெச்சிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.