காதலன் பற்றி பிரியா பவானி சங்கர் உருக்கம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ச்சி கண்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை (மாயவரம்) என்ற நகரத்தில் 1989-ம் டிசம்பர் 31ம் திகதி பிறந்தார் பிரியா பவானி சங்கர்.

எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர் படித்து விட்டு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த பிரியா, படித்துக் கொண்டிருக்கும் போதே அதற்கான முயற்சிகளையும் செய்து வந்துள்ளார்.

செய்தி வாசிப்பாளராக அறிமுகமானதும் மேற்படிப்பாக மாஸ்டர் ஆப் பிஸ்னஸ் அட்மினிஸ்டரேஷன் (எம்.பி.ஏ) படிப்பினை கற்றறிந்தார்.

தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர்.

பக்கத்து வீட்டு பெண் போல அழகான தோற்றம், அம்சமான நடிப்பு என கிராமம் முதல் நகரம் வரை பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பினார்.

2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் காலடி பதித்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது இந்தியன் 2 உட்பட பல படங்களில் நடித்து வரும் பிரியா தன்னுடைய காதலன் பற்றி பேசுகையில், எந்த ஒரு பிரபல அந்தஸ்தும் இல்லாத நாளில் இருந்து எனக்கு அவரை தெரியும், அதுமட்டுமின்றி என்னை அப்பாவிற்கு பிறகு நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர் அவர் தான்.

எனக்காக தனது உயிரை கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்கிறார், இந்த உறவை நான் உண்மையாகவே மதிக்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.