மோட்டார்சைக்கிளை அதிவேகமகா செலுத்தியதால் உயிரைவிட்ட இளைஞன்!

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

அதிவேகமாக சென்ற இளைஞன் கட்டுப்பாட்டை மீறி, பாறையில் மோதியில் விபத்து நேர்ந்தது.

கொடகவெலவில் வசிக்கும் 22 வயதுடைய ஷெகான் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கொடகவெல பொலிசார் தெரிவித்தனர்.