பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4-ல் குக் வித் கோமாளி புகழ் பங்குபெறுகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு என அனைத்து ரசிகர்களும் உற்சாகமடைந்துவிடுவார்கள்.

நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3-ல் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் டைட்டில் வின்னராகவும், நடன இயக்குனர் சாண்டி ரன்னர் அப் வின்னராகவும் வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்வித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கு பெறுவார்கள் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இதையடுத்து, தற்போது நடந்து முடிந்த பிரபல ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரசிகர்களை மிகவும் கவர்ந்த போட்டியாளரான புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவாரா? என தகவல்கள் வெளியானது.

மேலும், குக் வித் கோமாளி புகழால் தான் அந்த நிகழ்ச்சி வெற்றியடைய மிகப்பெரிய காரணம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. புகழுக்காவே, அந்த நிகழ்ச்சியை கண்போர்களும் அதிகம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தற்போது, குக் வித் கோமாளி புகழ் ஒரு நேர்காணல் ஷோவில் பங்கேற்ற பொழுது, அடுத்த பிக்பாஸ் சீசன் 4-ல் நீங்கள் பங்குபெறபோவதாக பரபரப்பாக பேசப்படு வருகிறது என கேட்டதற்கு, அதற்கு புகழ் நகைச்சுவையாக அதுக்கு அப்பறம் என்னை எப்படி வெளியே பார்க்கலாம்.

பிக்பாஸ் எல்லாம் எதற்கு, அது எல்லாம் வேண்டாம். கோமாளி, கோமாளி என நான் கோமாளியாகவே இருக்கேன். பிக்பாஸ்குலாம் எனக்கு ஆர்மியே வேண்டாம். குக் வித் கோமாளி ரசிகர்களே போதும். எனக்கு தேவை ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் அதுவே போதும். அங்கபோய்ட்டு ஏதாவது ஆகி விமர்சனப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.