பள்ளியில் படிக்கும் போது அந்த வேலையை கூட பார்த்தேன்….. பிரபல நடிகை….

பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன் பிரேமம் படத்தின் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவர் தமிழில் பவர்பாண்டி, கவண், காதலும் கடந்து போகும் என்று சில படங்களில் இவர் நடித்து இருக்கின்றார். சமீபத்தில் இவர் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது காதலர் தினம் குறித்து பேசிய மடோனா தன்னுடைய பள்ளி பருவ காதல் அனுபவம் குறித்து பத்திரிக்கையாளரிடம் பகிர்ந்துகொண்டார்.

தற்போது அப்பொழுது அவர் நான் பள்ளி படிக்கும் பொழுது, எனக்கு ஒருவர் நெருங்கிய நண்பர் இருந்தார். அவர் பக்கத்து வகுப்பில் பயின்ற மாணவி ஒருவரின் மீது காதல் கொண்டு இருந்தார். அந்த மாணவிக்கும் என்னுடைய நண்பனை மிகவும் பிடித்து இருந்தது. இருப்பினும் இருவரும் பயந்துகொண்டு தயக்கத்தில் காதலை சொல்ல மறுத்து விட்டனர். எனவே, காதலர் தினத்தன்று இருவரையும் பேசிக்கொள்ளவைக்க நாங்கள் திட்டம் தீட்டினோம்.

அதனால் அதன்படி நான் மற்றும் என்னுடைய தோழிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை சந்திக்க வைத்து காதலை சொல்ல முயற்சித்தோம். ஆனால், அவர்களோ என்ன சாப்பிட்டாய் மற்றும் எந்த நடிகர் பிடிக்கும் என்று காதலை விடுத்து மற்ற அனைத்தையும் பேசிக்கொண்டு மிகவும் நேரத்தை வீணடித்து விட்டனர் என்று அவர் சிரித்தவாறே கூறினார்.