அமேசானின் அதிரடி நடவடிக்கை..!!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் 2500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தாக்கத்திற்கு இதுவரை முறையான சிகிச்சை முறைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும்அமேசான் தளத்தில் குறித்த வைரஸ் தாக்கத்தை நிவர்த்தி செய்யக்கூடிய பொருட்கள் என கூறி சில பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத குறித்த பொருட்களை தனது தளத்தில் இருந்து நீக்குவதற்கு அமேசான் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அறிவித்தலை அமேசான் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த வைரஸ் தாக்கத்தினை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உலகின் பல பாகங்களிலும் பல்வேறு வியாபார முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.