விஜய்யின் குட்டி ஸ்டோரியை பாடும் தெலுங்கு டாப் ஹீரோ..!!

விஜய்யின் பிகில் படம் தெலுங்கில் நல்ல வசூல் ஈட்டியது. 20% அளவுக்கு விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தையும் தமிழில் வெளியாகும் நாளிலேயே தெலுங்கிலும் வெளியிடவுள்ளனர்.

தமிழில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் தான் பாடுகிறாராம். இதற்கான ரெகார்டிங் விரைவில் அனிருத் செய்யவுள்ளார் என தகவல் வந்துள்ளது.

இந்த செய்தி தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு பேசும் விஜய் ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.