பிரபல பாடகர் திடீர் மரணம்..!

பாப் ஸ்மோக் என்ற பிரபல அமெரிக்க பாப் பாடகரின் வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

அமெரிக்காவை சேர்ந்த 20 வயது இளம் பாடகர் பாப் ஸ்மோக். இவர் அமெரிக்கா மட்டும் அல்லாமல், உலகம் முழுதும் ரசிகர்களை கொண்டிருந்தார். இவரது ராப் பாடல்களுக்கு பெரும் ரசிகர்கள் உண்டு. பாப் ஸ்மோக் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் மேற்கு ஹாலிவுட் பகுதியில் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவருடைய வீட்டிற்குள் கொள்ளைக் கும்பல் ஒன்று புகுந்து இருக்கின்றது. அப்பொழுது அவர்களை தடுக்க பாப் முயன்றுள்ளார். இதனால், அவர்கள் துப்பாக்கியால் இவரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர்.

அதன் பின்னர் ரத்த வெள்ளத்தில் மிதந்த பாப் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பாம்பின் ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.