பலரையும் திருமணம் செய்து கொள்ள அமுலாகும் சட்டம்.!! எங்கு தெரியுமா ??

அமெரிக்கா நாட்டில் உள்ள யூட்டா மாகாணத்தின் மாநில செனட் சபையின் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி பெண்ணொருவர் பல ஆண்களுடன், ஆண் பல பெண்களுடன் அல்லது ஒரே தருணங்களில் திருமண உறவில் இருப்பது குற்றமில்லை என்று அறிவிக்கக்கூடிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது அமலாகியுள்ள இந்த சட்டத்தின் படி, பல நபர்களுடன் திருமண உறவு கொண்ட நபர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற முறை அமலில் இருந்தது.

இந்த புதிய சட்ட வரைவின் படி, இரண்டு நபர்களுடன் ஒரே தருணங்களில் திருமண உறவில் இருக்கும் நிலையானது, போக்குவரத்து விதிமீறல் போன்றுள்ள சிறிய குற்றமாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உறவுகளில் தொடர்பான ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருக்கும் பட்சத்திலேயே இது குற்றம் ஆகாது என்றும், பெண்ணோ அல்லது ஆணோ மற்றொரு துணைக்கு தெரியாமல் செய்து கொள்ளும் திருமணம் குற்றமாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்திற்கு யூட்டா மாகாணத்துடய பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் வழங்கப்படாத நிலையில், இந்த சபையின் ஒப்புதலுக்கு பின்னர், இது தொடர்பான சட்டம் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.