கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான பிரக்யான் ஒஜா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

33 வயதாகும் ஒஜா 2008-ம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார்.

இந்தநிலையில் ஒஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு இதுவரை ஆதரவளித்த வந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. தனது வாழ்வில் அடுத்தக்கட்டத்திற்கு செல்லக் கூடிய நேரம் இது என பதிவிட்டுள்ளார்.

இதுவரையில் இந்திய அணிக்காக 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள ஒஜா 652 ரன்கள் மற்றும் 21 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்களை வீழ்த்தியும், 3420 ரன்கள் விளாசியும் உள்ளார். 7 முறை டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

மும்பையில் 2013ம் ஆண்டு சச்சின் ஓய்வு பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒஜா கடைசியாக விளையாடினார்.

ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன் அணிக்காக ஒஜா விளையாடி வந்தார், இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்  ஆவார்.