‘இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்’ ரசிகரின் வேலையால் கடுப்பான சமந்தா!!

தமிழில் வெளியான 96 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது படமாக்கப்பட்டது. அதில் விஜய் சேதுபதி கேரக்டரில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்திருக்கிறார்.

தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் தெலுங்கு ரீமேக்கிலும் இயக்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பெருமாள் பக்தி மிகுந்த நடிகை சமந்தா அடிக்கடி திருப்பதி சென்றுவருவது வழக்கம். அப்படி செல்லும்போது அவர் படிக்கட்டுகளில் ஏறி தான் சொல்வார்.

இந்த நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடைபயணமாக படியில் திருப்பதிக்கு சென்று உள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். இந்த வேலை எல்லாம் இந்த இடத்தில் வேண்டாம் என்று அவரை எச்சரித்து விட்டு மீண்டும் நடையை தொடர்ந்தார் நடிகை சமந்தா.