ரத்த காயங்களுடன் வெளியான புகைப்படம்..!!

90களில் தமிழ் சினிமாவில் தன்னுடைய இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தியும் கட்டி இழுத்தவர் நடிகை சிம்ரன். பல வருடங்களாக தொடந்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.

திருமணம் செய்துகொண்ட பின்னர் சிம்ரன் தனது குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார். சில ஆண்டுகள் சினிமாவிற்கு கேப் விட்டிருந்தார். மீண்டும் ரஜினியின் பேட்ட படத்தில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்து இருந்தார்.

தற்போது 43 வயதாகின்றது. இவர் இளமையிலும், அழகிலும் கொஞ்சம் கூட மாற்றமே இல்லாமல் அதே துள்ளலுடன் நடித்து ரசிகர்களை மீண்டும் தன்னுடைய பக்கம் இழுத்து இருக்கின்றார்.

சமீபத்தில் சிம்ரன் காதலர் தினத்தை முன்னிட்டு (Mai Aur Meri KHWAISHEIN) என்ற மியூசிக் வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனனில் வெளியிட்டு ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடுத்ததாக வெளிவர இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி கால் மற்றும் நெத்தியில் ரத்த காயங்களுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்துவிட்டார்.