மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்..!!

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கென்யாவில் வசித்து வரும் நபர் டென்னிஸ் மூமோ (வயது 36). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ள நிலையில், இவர் தொடர்ச்சியாக பணிக்கு சென்று வந்துள்ளார். இதனால் தனது மனைவியுடன் அதிகளவு நேரத்தை கழிக்காமல் இருந்து வந்துள்ளார்.

கணவர் தன்னுடன் நேரம் செலவழிக்காமல் இருந்து வந்த நிலையில், குறிப்பிட்ட சமயத்திற்கு மேல் விரக்தியடைந்து இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு நான்கு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக மூமோ சார்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மனைவியின் மீது சந்தேகம் கொண்ட கணவன், பணிக்கு செல்வதற்கு முன்னதாக தனது மனைவியின் பிறப்புறுப்பில் பசையினை வைத்து அடைத்துவிட்டு சென்றுள்ளான். இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளான பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மூமோவை கைது செய்தனர். இது தொடர்பான விசாரணையில், மனைவி அவரது ஆண் நபருக்கு, அவரது நிர்வாண புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை மூமோ பார்த்துவிடவே, இது தொடர்பாக பேசிய நேரத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், பணிக்கு செல்வதற்கு முன்னதாக மனைவியின் பிறப்புறுப்பில் பசையை வைத்து அடைத்து சென்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

கணவனின் கொடூர செயலால் பெண்ணால் சிறுநீர் கழிக்க இயலாது அவதியுற்ற நிலையில், இவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.