பெற்ற தாயே மகளை கொன்ற கொடூரம்..!

பெண் குழந்தைகளை தெய்வமாக போற்றும் இந்தியாவில், பெண் குழந்தைகளை சிசுவிலேயே அளிப்பது, பிறந்த குழந்தை பெண்ணாக பிறந்தால் கருணை கொலை செய்வது போன்ற கொடூரமும் தொடர்ந்து வருகிறது.

முன்னொருகாலத்தில் இருந்த அளவிற்கு பெண் சிசு கொலைகள் மற்றும் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் கொடூரம் குறைந்து வந்தாலும், ஆங்காங்கே அவ்வப்போது நடந்து வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஷாஜாப்பூர் மாவட்டம் அம்ஹரியா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு (வயது 26). இவருக்கு முதலாவதாக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், மஞ்சு மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அதிகளவு ஆசையோடு இருந்த நேரத்தில், இரண்டாவதும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் கடுமையான விரக்தியடைந்த தாய், பிறந்து இரண்டு நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை கொடூர கொலை செய்துள்ளார்.

பின்னர் குழந்தையின் வயிற்றில் ஓங்கி அடித்ததால், குழந்தை வலியால் துடித்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்த போது விபரீத புரிந்துள்ளது. பின்னர் குழந்தையை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதன் பின்னர் விரிந்து வந்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து மஞ்சுவை கைது செய்தனர். இந்த துயரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.