தனது லிப்லாக் காட்சிகளை வெளியிட்ட பிந்து மாதவி.!

நடிகை பிந்துமாதவி தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். தமிழில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

பிந்து மாதவி தமிழில் நடித்த எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது இல்லை. ஜாக்சன்துரை படத்திற்கு பின்னர் அவர் கோலிவுட் பக்கம் தலை காட்டவில்லை. தமிழில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. புதுமுக நடிகைகள் அவருடைய வாய்ப்பை தட்டி பறித்து விட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இழந்த தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார். இந்நிலையில், தெலுங்கில் நடை போட்டுக்கொண்டிருக்கும் பிந்துமாதவி மஸ்டிஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகின்றார். இந்த சீரிஸில் ட்ரெய்லரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருக்கின்றார்.

அதில் முதன்முறையாக ஓபனாக முத்தக்காட்சியில் நடித்து இருப்பதை காணலாம். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், “படத்தில் கூட இப்படி எல்லாம் நடக்கல. ஆனால், வெப் சீரிஸில் பொளந்து கட்டுறீங்களே.” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.