ஐபிஎல் முதல் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

2020 ஐபிஎல் போட்டியின் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 29 அன்று தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 17அன்று கடைசி லீக் போட்டியில் பெங்களூர் – மும்பை அணிகள் மோதுகின்றன.

57 நாட்கள் நடைபெறவுள்ள போட்டியின் அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.

இறுதி சுற்று ஆட்டம் மே 24அன்று நடைபெறுகிறது. பிளே ஆஃப் மற்றும் இறுதிச்சுற்று ஆட்டங்களின் அட்டவணை வெளியிடப்படவில்லை.