யாழில் குப்பை கொழுத்திய போது ஏற்பட்ட தீ வைத்த யுவதிக்கு நேர்ந்த சோகம்!

யாழில் குப்பை கொழுத்திய போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த ஜீவரத்னம் யாழினி எனும் 21 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்ப்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  குறித்த கடந்த 7ம் திகதி வீட்டில் குப்பை கொளுத்த முயன்றபோது , அது எரியவில்லையென, வர்ணப்பூச்சிற்காக வைக்கப்பட்டிருந்த ரின்னரை எடுத்து ஊற்றியுள்ளார்.

இதன்போது அவரது சட்டையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே, சிகிற்சை பலனின்றி குறித்த யுவதி நேற்று உயிரிழந்துள்ளார்.