தமிழில் அறிமுகம் ஆகும்…. கன்னட நடிகை சாத்விகா….

தமிழ் சினிமாவில் எப்போதும் வேற்று மொழி நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம். கேரளா தொடங்கி வட இந்தியா வரை பல்வேறு வேற்று மாநில நடிகைகள் தமிழ் சினிமாவில் சாதித்துள்ளனர்.

தற்போது அந்த வரிசையில் பிரபல கன்னட நடிகை சாத்விகா தமிழில் அறிமுகம் ஆகிறார். அவர் 2323: தி பிகினிங் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைகிறார்.

மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் கதை 2020ல் துவங்கி 2323ல் முடிவது போல எடுக்கிறாராம் இயக்குனர் சதிஷ். இந்த படத்திற்காக சாத்விகா சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறாராம்.