காதல் கடிதம் கொடுத்து அடி வாங்கினேன், பிரபல இயக்குனர் கே பாக்யராஜ்!

புதிய வரப்புகள் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானவர் இயக்குனர் கே. பாக்யராஜ். இதன்பின் ஒரு இயக்குனராக இவர் அறிமுகமான படம் என்றால் அது சுவரில்லாத சித்திரங்கள் தான்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு போன்ற பல மொழிகளில் இயக்குனராக முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் அண்மையில் ஒரு பட விழாவில் கலந்து கொண்டு பேசிய போது “நான் சிறு வயதில் ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுக்க சென்றேன், அப்போது அந்த பெண்ணின் அண்ணன் அங்கு வந்து விட்டார். அதனால் நான் கடிதத்தை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன். இதன்பின் அந்த பெண்ணின் அண்ணன் ஒரு என் அண்ணை பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்தார். நான் கடிதம் கொடுத்த விஷயத்தை தான் கூற வந்துள்ளார் என்று நினைத்தேன், ஆனால் அவர் அதை கூறவில்லை”.

மேலும் பேசிய இவர் “இதன்பின் என் அண்ணன் என்னிடம் கடையில் போய் சில பொருட்கள் வாங்கி வர சொன்னார். நான் கடையில் இருந்து திரும்பி வந்த போது அந்த பெண்ணின் அண்ணன் எங்கள் வீட்டில் இருந்து போய் விட்டார். ஆனால் என் அண்ணன் கோபத்துடன் என் கன்னத்தில் பளீர் என்று அறைந்தார். நான் கூட அவர் அந்த விஷயத்தை கூறி விட்டு சென்று விட்டார் என்று தான் நினைத்தேன். ஆனால், என் அண்ணன் என்னிடம் கூறியது ‘நீ அந்த விலைமாது இருக்கும் தெரு பக்கம் போனாய்’ இனிமேல் அந்த போவாயாய்” என்று கூறினார்.

அப்போது நான் நினைத்து கொண்டேன் தன் தங்கையை பார்க்க நான் அந்த தெரு பக்கமே இனிமேல் வர கூடாது என்று இப்படி போட்டுக்கொடுத்துளார் என்று வெளிப்படையாக கூறினார்.