வரலக்ஷ்மியின் புகைப்படத்தை பங்கப்படுத்திய பிரபல நடிகர்..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் வரலக்‌ஷ்மி சரத்குமார். அதன் பின்னர், சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் மிரட்டல் வில்லியாக நடித்திருப்பார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் அவர் வெட்கப்படுவதுபோல் உட்கார்ந்திருக்கிறார். அதில் கேப்ஷனாக பீலிங் ஷை என்று போட்டுள்ளார். வெட்கத்திலும் பார்க்க வரலட்சுமி அழகாக இருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் ரசிகர்கள் இது வரலட்சுமியா என்று கேட்கும் அளவிற்கு வெட்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, நடிகர் பிரசன்னா “பார்ட்னர்.. நீயா… வெட்க்கப்படுறியா..?.. எப்படி..?” என்று கிண்டலடித்துள்ளார்.